ரோம்,
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி வாகை சூடிய இத்தாலி அணி நேற்று தங்கள் நாட்டுக்கு திரும்பியது. இத்தாலி அணியின் வெற்றியை அந்த நாட்டு ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இதையொட்டி அங்கு நடந்த வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க காரில் சென்ற 22 வயது இளைஞர் விபத்தில் சிக்கி பலியானார். அத்துடன் மிலன் நகரில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்ததில் 15 பேர் காயம் அடைந்தனர். அதில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.