கால்பந்து

பிரீமியர் லீக் கால்பந்து தொடர் - 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் பங்குபெறும் அணி வீரர்கள் மற்றும் பணியாளர்களில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரபல கால்பந்து தொடரான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் பங்குபெறும் வீரர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதோடு, வீரர்கள் மற்றும் மைதானத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி கடந்த வாரம் அணி வீரர்கள், பணியாளர்கள் என மொத்தம் 15,189 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த அர்செணல்-வோல்வ்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதில் வோல்வ்ஸ் அணியில் பெரும்பாலான வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் மாற்று வீரர்கள் போதிய அளவில் இல்லாதாதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்ட்டுள்ள 15-வது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது