கால்பந்து

லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி 35-வது முறையாக ‘சாம்பியன்’

லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 35-வது முறையாக ‘சாம்பியன்’ பட்டத்தை வென்றது.

தினத்தந்தி

மாட்ரிட்,

91-வது லா லிகா கிளப் கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் எஸ்பான்யோல் கிளப்பை தோற்கடித்தது. ரோட்ரிகோ 2 கோலும், மார்கோ அசென்சியோ, கரிமா பெஞ்சிமா தலா ஒரு கோலும் அடித்தனர்.

இன்னும் 4 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் கோப்பையை 35-வது முறையாக கைப்பற்றியது. இதுவரை 34 ஆட்டங்களில் ஆடியுள்ள ரியல்மாட்ரிட் 25 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி என்று 81 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. செவில்லா 64 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பார்சிலோனா 63 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

லா லிகா போட்டி வரலாற்றில் அதிக முறை பட்டம் வென்ற அணிகளின் பட்டியலில் ரியல் மாட்ரிட் (35 பட்டம்) முதலிடத்தில் நீடிக்கிறது. பார்சிலோனா கிளப் 26 பட்டங்கள் வென்று அடுத்த இடத்தில் இருக்கிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்