கால்பந்து

ரஷிய தாக்குதல்; உக்ரைனின் 2 இளம் கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு

ரஷிய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 2 இளம் கால்பந்து வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தாக்குதல் 8வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 2 கால்பந்து வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

அவர்கள் விட்டாலி சபைலோ (வயது 21) மற்றும் டிமிட்ரோ மார்ட்டினென்கோ (வயது 25) என கண்டறியப்பட்டு உள்ளனர். சபைலோ, லிவிவ் நகரின் கர்பாத்தி இளைஞர் அணியின் 3வது பிரிவில் கோல் கீப்பராக இருந்து வந்துள்ளார்.

மார்ட்டினென்கோ, ஹோஸ்டோமெல் அணியின் 2வது பிரிவில் கடைசியாக விளையாடியுள்ளார்.

இவர்களது மறைவை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஃபிப்ரோ உறுதிப்படுத்தி உள்ளது. இதுபற்றி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எங்களுடைய நினைவுகள், அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர்களது சக வீரர்களுடன் இருக்கும். இந்த போரில் கால்பந்து விளையாட்டில் முதல் இழப்பு பற்றிய செய்தி இது. அவர்களது ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்து உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு