திருவனந்தபுரம்,
75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் நடைபெற்று வருகிறது.
சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில், மலப்புரம் மஞ்சேரி பய்யநாடு மைதானத்தில் நேற்று நடைபெற்ற குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில், கேரளா பஞ்சாப் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் கேரள அணி, 2- 1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
பஞ்சாப் அணியை இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு கேரளா தகுதி பெற்றது. குரூப்-ஏ பிரிவில், 4 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் கேரளா முதலிடம் பிடித்தது.
இந்த வெற்றியின் மூலம், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை கேரளா பெற்றது.
மேற்கு வங்கம் (6 புள்ளிகள்) மற்றும் மேகாலயா (4 புள்ளிகள்) குரூப்-ஏ பிரிவில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அரையிறுதிப் போட்டிகள் ஏப்ரல் 28,29 தேதிகளில் நடைபெறும்.
மற்றொரு குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில், மேற்கு வங்கம் 4-3 என்ற கோல் கணக்கில் மேகாலயா அணியை தோற்கடித்தது.