கால்பந்து

ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து: செனகல் அணி முதல்முறையாக ‘சாம்பியன்’

ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியில், செனகல் அணி முதல்முறையாக ‘சாம்பியன்’ பட்டத்தை வென்றது.

தினத்தந்தி

யாவுண்டே,

33-வது ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டி கேமரூன் நாட்டில் நடந்தது. 2 ஆண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் செனகல்-எகிப்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பான இந்த போட்டியில் வழக்கமான ஆட்ட நேரம் (90 நிமிடம்) முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 30 நிமிட கூடுதல் நேரத்திலும் கோல் எதுவும் விழவில்லை. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

-இதில் செனகல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி கோப்பையை தன்வசப்படுத்தியது. 2002-ம் ஆண்டு கேமரூனிடமும், 2019-ம் ஆண்டு அல்ஜீரியாவிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்ட செனகல் அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்