Image Courtesy : @SAFFfootball twitter 
கால்பந்து

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: லெபனான் அணி 'ஹாட்ரிக்' வெற்றி

அரைஇறுதியில் லெபனான் அணி நடப்பு சாம்பியனான இந்திய அணியுடன் மோதுகிறது.

பெங்களூரு,

14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த லெபனான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை தோற்கடித்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) ருசித்தது.

வெற்றிக்குரிய கோலை 24-வது நிமிடத்தில் கேப்டன் ஹசன் அலி மாடோக் அடித்தார். 'பி' பிரிவில் முதலிடத்தை பிடித்த லெபனான் அணி அரைஇறுதியில் 'ஏ' பிரிவில் 2-வது இடத்தை பெற்ற நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது. அதே நாளில் நடக்கும் மற்றொரு அரைஇறுதியில் குவைத்-வங்காளதேச அணிகள் சந்திக்கின்றன.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை