டாக்கா,
7 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி லீக்கில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தி அரைஇறுதியை எட்டியது. அரைஇறுதியில் இந்திய அணி வருகிற 12-ந்தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது 5 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.