போகரா,
4 அணிகள் இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான 7-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாளத்தின் போகராவில் நடந்து வருகிறது. இதில் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா , பூடான் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் 8-0 என்ற கோல் கணக்கில் பூடானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. லீக் முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த வங்காளதேசம் (3 வெற்றியுடன் 9 புள்ளி), இந்தியா (2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளி) அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வருகிற 7-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகள் மோதுகின்றன.