கால்பந்து

கால்பந்து உலகக்கோப்பையுடன் நாடு திரும்பிய ஸ்பெயின் வீராங்கனைகள்; உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பிய ஸ்பெயின் வீராங்கனைகளுக்கு அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தினத்தந்தி

மேட்ரிட்,

சிட்னியில் கடந்த 20-ந்தேதி நடைபெற்ற பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி முதல் முறையாக பெண்கள் கால்பந்து உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது.

இந்த நிலையில் உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பிய ஸ்பெயின் வீராங்கனைகளுக்கு அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேட்ரிட் நகரில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு இடையே வீராங்கனைகள் திறந்த வாகனத்தில் வெற்றிக் கோப்பையுடன் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தினர். தங்கள் மீது நம்பிக்கை வைத்த ஸ்பெயின் மக்களுக்கு கோப்பையை அர்ப்பணிப்பதாக வீராங்கனைகள் தெரிவித்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்