Image : @Alhilal_EN Tweet  
கால்பந்து

சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப்பில் இணைந்தார் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மார்

சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப்பில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மார் இன்று கையெழுத்திட்டார்.

தினத்தந்தி

ரியாத்,

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கால்பந்து கிளப்புக்காக 6 ஆண்டுகள் விளையாடி வந்தார்  இந்த நிலையில் அவரை தங்கள் கிளப்பில் இணைக்க சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப் முயற்சி மேற்கொண்டது.

அவரை விற்க பி.எஸ்.ஜி. நிர்வாகமும் ஒப்புக்கொண்டது. இதே போல் நெய்மாரும் 2 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் அல்-ஹிலால் கிளப்பில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப்பில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் நட்சத்திர வீரர் நெய்மார் இன்று கையெழுத்திட்டார்.

அல்-ஹிலால் கிளப் அவரை சுமார் 90 மில்லியன் யூரோவுக்கு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பிடமிருந்து வாங்கியிருக்கிறது. அல்-ஹிலால் கிளப்புக்காக 2 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் நெய்மார், ஆண்டுக்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் 1250 கோடி ரூபாய் ஊதியமாகப் பெறுவார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, சவுதி கிளப் அணியான அல்-நசர் அணியில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரெனால்டோ விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்