கால்பந்து

பெங்களூரு அணியில் சுனில் சேத்ரி ஒப்பந்தம் நீடிப்பு

இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி பெங்களூரு அணியில் தொடருவதற்கான ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 2013-ம் ஆண்டு முதல் பெங்களூரு எப்.சி. அணியில் அங்கம் வகித்து வருகிறார். அவர் மேலும் ஓராண்டுக்கு பெங்களூரு அணியில் தொடர்வதற்கான தனது ஒப்பந்தத்தினை நீட்டித்து இருக்கிறார். இதனை பெங்களூரு எப்.சி. அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது.

38 வயதான சுனில் சேத்ரி முக்கிய பங்காற்றியதன் மூலம் பெங்களூரு அணி ஐ லீக் (2014, 2016), பெடரேஷன் கோப்பை (2015, 2017), சூப்பர் கோப்பை (2018), ஐ.எஸ்.எல். (2019), தூரந்த் கோப்பை (2022) ஆகிய போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 'தனக்கு பிடித்தமான பெங்களூரு அணியுடன் நீடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வேறு எந்த அணிக்கும் செல்வது குறித்து நினைத்துகூட பார்க்கவில்லை' என்று சுனில் சேத்ரி தெரிவித்து உள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை