கால்பந்து

16 வயதுக்குட்பட்டோர் தெற்காசிய கால்பந்து: இந்தியா மீண்டும் 'சாம்பியன்'

அபாரமாக ஆடிய இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை தக்கவைத்தது.

திம்பு,

6 அணிகள் பங்கேற்ற 8-வது 16 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பூட்டான் தலைநகர் திம்புவில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதின.

அபாரமாக ஆடிய இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை தக்கவைத்தது. பாரத் லாரென்ஜாம் (8-வது நிமிடம்), லெவிஸ் ஜாங்மின்லுன் (74-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். இந்த கோப்பையை இந்தியா வெல்வது இது 5-வது முறையாகும்.  

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்