கால்பந்து

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து அணி கால்இறுதிக்கு தகுதி

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது சுற்றில் இங்கிலாந்து அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் நைஜீரியாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.

தினத்தந்தி

பிரிஸ்பேன்,

பெண்கள் கால்பந்து

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்பேன் நகரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒன்றில் உலக தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் இங்கிலாந்து அணி, 40-வது இடத்தில் உள்ள நைஜீரியாவை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பந்தை அதிக நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் (57 சதவீதம்) வைத்து இருந்ததுடன், 4 முறை இலக்கை நோக்கி ஷாட் அடித்தும் அவர்களின் முயற்சியை நைஜீரியா அணியினர் முறியடித்தனர்.

வழக்கமான 90 நிமிடம் முடிவில் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. கூடுதல் நேரமாக வழங்கப்பட்ட 30 நிமிடத்திலும் கோல் எதுவும் விழவில்லை.

இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை விரட்டியடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது. 6-வது முறையாக உலகக் கோப்பையில் ஆடும் இங்கிலாந்து அணி எல்லா முறையும் குறைந்தது கால்இறுதியை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கால்இறுதியில் ஆஸ்திரேலியா

சிட்னியில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுக்கு மத்தியில் களம் புகுந்த ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வெளியேற்றி 4-வது முறையாக கால்இறுதிக்குள் அடியெடித்து வைத்தது. ஆஸ்திரேலிய அணியில் கார்ட்லின் போர்ட் 29-வது நிமிடத்திலும், ஹெய்லி ராசோ 70-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

இன்றுடன் 2-வது சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. இன்றைய ஆட்டங்களில் கொலம்பியா-ஜமைக்கா, பிரான்ஸ்-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது