Image Courtesy: Twitter  
கால்பந்து

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்...!

ஸ்பெயின் அணி காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

தினத்தந்தி

பிரிஸ்பேன்,

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 2ம் சுற்று ( ரவுண்ட் ஆப் 16) முடிவில் ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், இங்கிலாந்து, கொலம்பியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

இரண்டு நாள் ஓய்வுக்கு பின்னர் தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. இன்று நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - நெதர்லாந்து அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை. இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 81வது நிமிடத்திலும், நெதர்லாந்து அணி கூடுதல் நேரமான 91வது நிமிடத்திலும் கோல் அடித்தன.

வழக்கமான நேர முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் அணி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது. இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்