கால்பந்து

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி கோல் மழை

பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்க அணி கோல் மழை பொழிந்தது.

தினத்தந்தி

பாரீஸ்,

24 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் எப் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அமெரிக்க அணி, தாய்லாந்தை சந்தித்தது. இதில் கோல் மழை பொழிந்த அமெரிக்கா 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை பந்தாடியது. அந்த அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் மோர்கன் 5 கோல்கள் அடித்தார். உலக கோப்பை போட்டியில் அமெரிக்காவின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். ஏ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் நைஜீரியா 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்