கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: நைஜீரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நைஜீரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றிபெற்றது. #FIFAWorldCup2018

தினத்தந்தி

ரஷியா,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இரண்டாவது லீக் போட்டியில் டென்மார்க், பிரான்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் டிரா ஆனது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவை எதிர்கொண்டது. ஐஸ்லாந்துடன் டிரா கண்டு, குரோஷியாவுடன் படுதோல்வி அடைந்த அர்ஜென்டினா (1 புள்ளி) இன்றைய தனது கடைசி லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய உச்சக்கட்ட நெருக்கடியில் இருந்தது. வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற சூழலில் அர்ஜென்டினா அணி களமிறங்கியது.

ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்றது. அப்போது அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் மெஸ்சி 1 கோல் அடித்து ரசிகர்களை உற்சாகமடைய செய்தார். அந்த கோலை சமன் செய்ய நைஜீரியா அணி எடுத்த முயற்சிகள் அனைத்தும் எடுபடாமல் போனது. இதன்மூலம் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா அணி 0-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் நைஜீரியா அணி சார்பில் விக்டர் மோசஸ் 1 கோலை பதிவு செய்தார். ஆட்டத்தின் இறுதியில் மார்கோஸ் ரோஜோ 1 கோல் அடித்து அசத்தினார். இதனால் அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் முன்னிலைபெற்றது. இதன் மூலம் நைஜீரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்