கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி - இறுதிப்போட்டிக்கு தகுதி

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #FIFAWorldCup2018

தினத்தந்தி

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. லீக், நாக்-அவுட் மற்றும் கால்இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

இதில் முதலாவது அரைஇறுதிப்போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணி, 3-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தை எதிர்கொண்டது.

முன்னதாக, பிரான்ஸ் அணி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, பெரு அணிகளை வென்றது. டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிரா கண்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை வெளியேற்றியது. கால் இறுதியில் 2 முறை சாம்பியனான உருகுவே அணியை வீழ்த்தியது.

இதுபோல் பெல்ஜியம் அணி லீக் ஆட்டங்களில் பனாமா, துனிசியா, இங்கிலாந்து அணிகளை தோற்கடித்தது. 2-வது சுற்று ஆட்டத்தில் ஜப்பானை வென்றது. கால்இறுதியில் 5 முறை சாம்பியனான பிரேசிலை வெளியேற்றியது.

இந்நிலையில் இன்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தின் துவக்கம் முதலே பரபரப்பு நிலவியது. இரு அணியினரும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமனில் இருந்தது.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் 1 கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதனை சமன் செய்ய பெல்ஜியம் அணி வீரர்கள் கடுமையாக போராடினார்கள். ஆனால் இறுதிவரை பெல்ஜியம் அனியினரால் கோல் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து