கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஷ்ய அணி வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பெனாலிட்டி ஷூட் அவுட்டில் 4-3 கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி ரஷ்யா அணி காலிறுதிக்கு முன்னேறியது. #FIFAWorldCup2018

தினத்தந்தி

மாஸ்கோ,

உலக கோப்பை கால்பந்து தொடரில், மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, போட்டியை நடத்தும் ரஷிய அணியை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கியது முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் செர்கெய் தனது முதல் கோலை பதிவு செய்தார். பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ரஷ்யா அணி வீரர் அர்டேம் 1 கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தது. இதனால் ஆட்டத்திற்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனாலிட்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் ஸ்பெயின் அணி இரண்டு வாய்ப்புகளை வீணடிக்க ரஷ்யா அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 1966-ம் ஆண்டிற்கு பிறகு ரஷ்யா அணி காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து