Image : FIFA World Cup 
கால்பந்து

உலகக் கோப்பை தகுதி சுற்று: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினாவை வீழ்த்தியது உருகுவே

புள்ளிகள் பட்டியலில், 12 புள்ளிகளுடன் அர்ஜென்டினா முதல் இடத்தில் உள்ளது

தினத்தந்தி

பியூனஸ் அயர்ஸ்,

2026-ல் பிபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது . அந்த வகையில் நேற்று நடந்த தகுதி சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினா, உருகுவே அணிகள் மோதின. இந்தப் போட்டி பியூனஸ் அய்ரஸ் நகரில் நடைபெற்றது.

இதில் தொடக்கம் முதல் உருகுவே அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 41 வது நிமிடத்தில் உருகுவே அணியின் ரொனால்ட் அரௌஜோ கோல் அடித்தார். தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் 87 வது நிமிடத்தில் உருகுவே வீரர் டார்வின் நுனேஸ் கோல் அடித்தார். இதனால் இந்தப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தகுதி சுற்றில் தென் அமெரிக்க பிராந்தியத்தை சேர்ந்த அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலில், 12 புள்ளிகளுடன் அர்ஜென்டினா முதல் இடத்தில் உள்ளது. உருகுவே 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக் கோப்பைக்கு பிறகு முதல் முறையாக சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்துள்ளது .

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை