கால்பந்து

கோத்தகிரியில் மண்டல கால்பந்து போட்டி: இறுதிப்போட்டியில் சென்னை அணி சாம்பியன்..!

கோத்தகிரியில் நடைபெற்ற மண்டல கால்பந்து இறுதிப்போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

தினத்தந்தி

கோத்தகிரி,

தெற்கு மண்டல மூத்தோர் கால்பந்து சங்கத்தின் சார்பில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மூத்தோர் கால்பந்து போட்டிகள் நேற்று முன் தினம் தொடங்கின.

இதில் நீலகிரி, கோவை சிட்டி, சென்னை, பாலக்காடு ஒட்டப்பாலம், தஞ்சாவூர், பெங்களூர், காரைக்குடி, கோவை நேதாஜி கால்பந்து அணி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடின.

இதில் இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் கோவை சிட்டி அணிகள் நுழைந்து விளையாடின. இதில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்