image courtesy; twitter/ @TheHockeyIndia 
ஹாக்கி

13-வது தேசிய சீனியர் ஆக்கி; பஞ்சாப் அணி சாம்பியன்!

இந்த தொடரில் தமிழக அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் மொத்தம் 28 அணிகள் பங்கேற்றிருந்தன. முடிவில் அரியானா மற்றும் பஞ்சாப் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி இன்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து முடிவை அறிய கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் பஞ்சாப் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. 2-வது இடம் பிடித்த அரியானா அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.

இறுதி போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழ்நாடு பெனால்டி ஷூட் அவுட்டில் கர்நாடக அணியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது. 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்