ஹாக்கி

தேசிய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சி முகாமுக்கு 5 தமிழக வீரர்கள் தேர்வு

தேசிய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சி முகாமுக்கு 5 தமிழக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

சமீபத்தில் கோவில்பட்டியில் நடந்த 11-வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி நடந்தது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அணியை சேர்ந்த ஆர்.நிஷி தேவஅருள், வி.அரவிந்த், ஆர்.கவியரசன், பி.சதீஷ், என்.திலீபன் ஆகியோர் தேசிய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கனிமொழி எம்.பி.யை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன், தூத்துக்குடி மண்டல முதுநிலை மேலாளர் பிராங்க் பால் ஜெயசீலன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி பேட்ரிக், பயிற்சியாளர் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்