ஹாக்கி

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்; ஜார்கண்ட்டை வீழ்த்தியது உத்தரபிரதேசம்

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் உத்தரபிரதேசம் அணி ஜார்கண்ட்டை வீழ்த்தியது.

லக்னோ,

7 வது சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் நடந்து வருகின்றது. மொத்தமுள்ள 20 அணிகளை நான்கு பிரிவுகளாக பிரித்து லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

ஐந்தாம் நாளான நேற்று நடைபெற்ற 'ஏ' பிரிவு போட்டியில் உத்திரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் அணிகள் மோதின. போட்டி தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் ஜார்கண்ட் முதல் கோல் அடித்தது. இரண்டாவது சுற்றில் உத்தரபிரதேச வீரர்கள் இரண்டு கோல்கள் அடித்தனர். நான்காவது சுற்றில் மேலும் ஒரு கோல் அடித்தனர். இறுதிவரை போராடிய ஜார்கண்ட் ஒரு கோல் அடித்தது. ஆட்ட நேர முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் உத்தரபிரதேசம் வெற்றி பெற்றது.

'பி' பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஒடிசாவும் மத்தியபிரதேசமும் மோதின. இதில் 4-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி வெற்றி பெற்றது. 'சி' பிரிவில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதின. இதில் பஞ்சாப் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். 'டி' பிரிவு போட்டியில் கர்நாடகாவும் சண்டிகரும் மோதின. இதில் 4-1 என்ற கோல் கணக்கில் கர்நாடகா வெற்றி பெற்றது.

இந்த சாம்பியன்சிப் போட்டிகள் ஜூன் 25 வரை நடைபெறுகிறது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு