ஹாக்கி

அகில இந்திய ஆக்கி: இந்தியன் ஆயில் அணி 2-வது வெற்றி

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியன் ஆயில் அணி, கர்நாடகாவை சாய்த்து 2-வது வெற்றியை ருசித்தது.

தினத்தந்தி

சென்னை,

எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்தியன் ஆயில் அணி 4-3 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை சாய்த்து 2-வது வெற்றியை ருசித்தது. இந்தியன் ஆயில் அணியில் குர்ஜிந்தர் சிங் 2 கோலும் (15-வது, 53-வது நிமிடம்), அர்மான் குரேஷி (33-வது நிமிடம்), தல்விந்தர் சிங் (37-வது நிமிடம்) தலா ஒரு கோலும், கர்நாடகா அணியில் கணேஷ் மஜி 'ஹாட்ரிக்' கோலும் (39, 41, 56-வது நிமிடம்) அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய விமானப்படையை தோற்கடித்தது. பஞ்சாப் நேஷனல் வங்கி வீரர் நவீன் அன்டில் 58-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு