ஹாக்கி

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: ஜெர்மனியை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன்!

அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.

புவனேஸ்வர்,

12-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஜெர்மனி அணி, அர்ஜென்டினாவுடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் இருந்தது. அதன் பிறகு ஏற்கனவே 2 கோல் போட்டிருந்த அர்ஜென்டினாவின் லாட்டரோ டொமின் 50-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மேலும் ஒரு கோல் திருப்பினார். மற்றொரு அர்ஜென்டினா வீரர் பிராங்கோ அகோஸ்டினி கடைசி நிமிடத்தில் கோல் அடிக்க, ஜெர்மனி நிலைகுலைந்தது. முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது. வெற்றி பெற்றதும் அர்ஜென்டினா வீரர்கள் பூரிப்பில் ஆனந்தகண்ணீர் விட்டனர். அந்த அணி உலக கோப்பையை வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2005-ம் ஆண்டிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு