ஹாக்கி

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் நெதர்லாந்து அணியுடனான ஆட்டத்தினை சமன் செய்து, இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. #ChampionsTrophyHockey

பிரிடா,

37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, அர்ஜென்டினா, பாகிஸ்தான், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.

முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், அர்ஜென்டினா அணிகளை இந்திய அணி வீழ்த்தியது. அடுத்து நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. பின்னர் பெல்ஜியம் அணிக்கு எதிராக விளையாடிய 4வது போட்டியை சமன் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 7 புள்ளிகள் கிடைத்தது. ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி 10 புள்ளிகளுடன் தகுதி பெற்றுவிட்டது. இதில் நெதர்லாந்து அணி 6 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்தது.

இதனால் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பு இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையே நிலவியது. இந்த நிலையில் இந்தியா, நெதர்லாந்து அணிகளுக்கிடையே 5வது மற்றும் கடைசி லீக் போட்டி இன்று நடந்தது. இந்தப்போட்டியை இந்திய அணி குறைந்தபட்சம் சமன் செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற சூழல் நிலவியது. மேலும் நெதர்லாந்து அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்கிற சூழ்நிலையில் களமிறங்கியது.

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் தலா ஒரு கோல் போட்டன. இதையடுத்து போட்டி சமனில் முடிந்தது. இதனால் இந்திய அணி 8 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் அடுத்து நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...