கோப்புப்படம் 
ஹாக்கி

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: முதல் போட்டியில் இந்திய ஆக்கி அணி கானாவுடன் மோதல்!

பர்மிங்காமில் நடைபெறும் முதல் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணி கானாவை எதிர்கொள்கிறது.

பர்மிங்காம்,

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் ஆண்கள் மற்றும் பெண்கள் காமன்வெல்த் ஆக்கிப் போட்டிகள் வரும் ஜூலை 29 முதல் தொடங்குகிறது, தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் இங்கிலாந்து மற்றும் கானா அணிகள் மோதுகின்றன, மேலும் பெண்களில் நியூசிலாந்து மற்றும் கென்யா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

முதல் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணி கானாவை எதிர்கொள்கிறது.

அதன் பிறகு, இந்தியா அணி ஆண்களுக்கான போட்டியில் இங்கிலாந்து, கனடா, வேல்ஸ் அணிகளையும், பெண்களுக்கான போட்டியில் இந்தியா வேல்ஸ், இங்கிலாந்து, கனடா ஆகிய அணிகளையும் எதிர்கொள்கிறது.

ஆண்களின் பிரிவின் இரு அரையிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 6ஆம் தேதியும், பெண்களுக்கான அரையிறுதி ஆகஸ்ட் 5ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்