கோல்ட் கோஸ்ட்,
ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில், 2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில், தொடர்ந்து பதக்க வேட்டை நடத்தி வரும் இந்தியா , பதக்க பட்டியலில் தற்போது வரை, 14 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இன்று மகளிர் ஹாக்கி போட்டிக்கான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. இதையடுத்து, வெண்கல பதக்கத்துக்கான போட்டியில், இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.