image courtesy: via ANI 
ஹாக்கி

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி: கால்இறுதி வாய்ப்பை உறுதி செய்தது இந்தியா..!

'டி' பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனியுடன் மோதியது.

தினத்தந்தி

போட்செப்ஸ்ட்ரூம்,

9-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று தொடங்கியது. வருகிற 12-ந் தேதி வரை நடக்க உள்ள இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 15 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் 'டி' பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, ஜெர்மனியுடன் மோதியது. தொடக்க ஆட்டத்தில் வேல்சுடன் மோதி வெற்றி பெற்ற சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி, இன்று நடந்த 2-வது ஆட்டத்தில் ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கால்இறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இந்திய ஜூனியர் பெண்கள் அணியின் கோல் கீப்பர், பிச்சு தேவி கரிபம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோது, லால்ரெம்சியாமி, மும்தாஜ் கான தலா ஒரு கோல் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

அடுத்ததாக நாளை மறுநாள் (ஏப்ரல் 5) நடைபெறும் போட்டியில் இந்திய அணி மலேசியாவுடன் மோத இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது