image courtesy;twitter/@TheHockeyIndia 
ஹாக்கி

தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப்; அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய அணிகள்...!!

13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

தினத்தந்தி

ஒடிசா,

13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடர் ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற பிஸ்ரா முண்டா ஆக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.28 அணிகள் இடம் பெற்றிருந்தன.லீக் மற்றும் காலிறுதி சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

அரையிறுதி சுற்றில் அரியானா-மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர்-ஜார்கண்ட் பலபரீட்சை நடத்த உள்ளன.

இந்த தொடரில் அரியானா மற்றும் மத்தியப்பிரதேச அணிகள் தோல்வியே சந்திக்கவில்லை.பலம் வாய்ந்த இரு அணிகளும் மோத உள்ளதால் அரையிறுதி போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.எனினும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான அரியானா வெற்றி பெறவே அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் அணிகள் மோத உள்ளன.காலிறுதி சுற்றில் இரு அணிகளும் தங்களது எதிர் அணியினரை பெனால்டி ஷூட்அவுட்டில் விழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு