ஹாக்கி

தேசிய பயிற்சி முகாமிற்கான 33 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு

தேசிய பயிற்சி முகாமிற்கான 33 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு கழக வளாகத்தில் வருகிற 12ந்தேதி முதல் 30ந்தேதி வரை இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கான தேசிய பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதற்காக 33 வீராங்கனைகள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி தலைமை பயிற்சியாளர் ஜோயர்டு மரீஜ்னி கூறும்பொழுது, உள்ளூர் போட்டிகளில் சிறந்த முறையில் விளையாடிய இளம் வீராங்கனைகள் சிலர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களை தவிர மற்ற அனைவரும் முன்பு அணியில் இருந்தவர்களே ஆவர்.

இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் நன்றாக விளையாடியவர்களும் நமது அணியில் உள்ளனர் என கூறியுள்ளார்.

அணி வீராங்கனைகள் விவரம்

கோல்கீப்பர்கள்:

சவீதா, ரஜனி எதிமரபு மற்றும் சோனல் மின்ஜ்.

தடுப்பு ஆட்டக்காரர்கள்:

தீப் கிரேஸ், சுனிதா லக்ரா, சுசீலா சானு, குர்ஜீத் கவுர், ரஷ்மிதா மின்ஜ், சுமன் தேவி, மகிமா சவுத்ரி, நிஷா மற்றும் சலீமா தெட்டே.

நடுகள வீராங்கனைகள்:

நிக்கி பிரதான், மோனிகா, லில்லிமா மின்ஜ், நமீதா தோப்போ, நேஹா கோயல், உதித்தா, ஜோதி, அனுஜா சிங், சியாமா தித்கம், சோனிகா மற்றும் கரீஷ்மா யாதவ்.

முன்கள வீராங்கனைகள்:

ராணி, லால்ரெம்சியாமி, நவ்னீத் கவுர், நவ்ஜோத் கவுர், ரஜ்வீந்தர் கவுர், வந்தனா கட்டாரியா, அனுபா பர்லா, பிரியங்கா வாங்கடே, ரீனா கோகர் மற்றும் லீலாவதி மல்லமடா.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்