image courtesy: twitter/@TheHockeyIndia  
ஹாக்கி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி தொடர்: முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தினத்தந்தி

பெர்த்,

ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி பெர்த்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

உள்ளூர் சாதகத்தை பயன்படுத்திய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அடுத்தடுத்து கோல்களை போட்டு தள்ளிய ஆஸ்திரேலிய அணி 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா தரப்பில் டாம் விக்காம் 2 கோல்களும், டிம் பிராண்ட், ஜோயல் ரிண்டலா, பிளின் ஓகிளிவ் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்தியா சார்பில் குர்ஜந்த் சிங் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து