Image Courtesy: @TheHockeyIndia 
ஹாக்கி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி தொடர்; 4வது போட்டியிலும் தோல்வியை சந்தித்த இந்தியா

இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

தினத்தந்தி

பெர்த்,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களின் முடிவில் 3-0 என ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மப்ரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்.

இதையடுத்து அபாரமாக ஆடிய் ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜெர்மி ஹேவர்ட் (19 மற்றும் 47 வது நிமிடம்), ஜாக் வெல்ச் (54வது நிமிடம்) பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அடுத்தடுத்து கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தனர்.

இதையடுத்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தை 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அனைத்து ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 4-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து