ஹாக்கி

உலக ஆக்கி லீக்:பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

உலக ஆக்கி லீக் அரை இறுதியில் பாகிஸ்தானை வென்று இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

லண்டன்,

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதி வருகின்றன. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியா-கனடா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்நிலையில் முதலில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 கோல்கள் அடித்து முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.