image courtesy: via ANI 
ஹாக்கி

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி: வேல்சை வீழ்த்தியது இந்திய அணி..!

'டி' பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா, வேல்ஸ் அணியுடன் மோதியது.

தினத்தந்தி

போட்செப்ஸ்ட்ரூம்,

9-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று தொடங்கியது. வருகிற 12-ந் தேதி வரை நடக்க உள்ள இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 15 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 'டி' பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி வேல்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி ஜெர்மனி அணியுடன் மோத உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து