ஹாக்கி

சிறந்த சர்வதேச ஆக்கி வீரர் விருது பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்

விருது பட்டியலுக்கு தேர்வாகி இருக்கும் வீரர்கள் விவரத்தை சர்வதேச ஆக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த சர்வதேச வீரர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலுக்கு தேர்வாகி இருக்கும் வீரர்கள் விவரத்தை சர்வதேச ஆக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது பட்டியலில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், நெதர்லாந்து அணியின் தியரி பிரிங்க்மேன், ஜோப் டி மோல், ஜெர்மனியின் ஹன்னிஸ் முல்லர், இங்கிலாந்தின் ஜாக் வாலெஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சிறந்த வீரர் யார் என்பது ஓட்டெடுப்பு மூலம் முடிவு செய்யப்படும். சர்வதேச ஆக்கி சம்மேளன நிபுணர் கமிட்டியினர், தேசிய அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அளிக்கும் வாக்குகளில் அதிகம் பெறுபவர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்