ஹாக்கி

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு

இந்திய பெண்கள் ஆக்கி அணி இந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்களில் ஆடுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹான்சோவ் நகரில் வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி இந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்களில் ஆடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான போட்டி வருகிற 18, 20, 21 ஆகிய தேதிகளிலும், இந்தியா-ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதும் போட்டி 25, 27 ஆகிய தேதிகளிலும் அடிலெய்டில் நடக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கோல் கீப்பர் சவிதா கேப்டனாகவும், தீப் கிரேஸ் எக்கா துணைகேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய பெண்கள் அணி வருமாறு:-

கோல் கீப்பர்கள்: சவிதா (கேப்டன்), பிச்சுதேவி கரிபாம், பின்களம்: தீப் கிரேஸ் எக்கா (துணை கேப்டன்), நிக்கி பிரதான், இஷிகா சவுத்ரி, உதிதா, குர்ஜித் கவுர், நடுகளம்: நிஷா, நவ்ஜோத் கவுர், மோனிகா, சலிமா டெடி, நேஹா, நவ்னீத் கவுர், சோனிகா, ஜோதி, பல்ஜீத் கவுர், முன்களம்: லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா, சங்கிதா குமாரி, ஷர்மிளா தேவி.  

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்