ஹாக்கி

சர்வதேச ஆக்கி : கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

உலக கோப்பை ஆக்கி போட்டிக்கு தயாராகும் பொருட்டும் இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

அடிலெய்டு,

உலக கோப்பை ஆக்கி போட்டிக்கு தயாராகும் பொருட்டும் இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதன் கடைசி ஆட்டம் அடிலெய்டில் நேற்று நடந்தது.

விறுவிறுப்பான இந்த மோதலில் ஆதிக்கம் செலுத்திய 'நம்பர் ஒன்' அணியான ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 5-2 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னணியில் இருந்தது. அதன் பிறகு 55-வது நிமிடத்தில் இந்தியாவின் சுக்ஜீத் சிங்கும், 60-வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கும் கோல் அடித்து வித்தியாசத்தை கொஞ்சம் குறைத்தனர்.

முடிவில் இந்திய அணி 4-5 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. அத்துடன் தொடரையும் 1-4 என்ற கணக்கில் இழந்தது.

சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

குவைத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; குஜராத்தில் தரையிறக்கம்

மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி

79-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்