image courtesy; twitter/@TheHockeyIndia 
ஹாக்கி

நான்கு நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆக்கி தொடர்; இந்திய மகளிர் அணி வெற்றி

ஸ்பெயினுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.

தினத்தந்தி

பெர்லின்,

ஜெர்மனியில் 4 நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் தொடரை நடத்தும் அணியான ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் பங்கேற்றுள்ள இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில் ஜெர்மனிக்கு எதிராக தோல்வியும், இங்கிலாந்து அணிக்கு எதிராக சமனும் கண்டிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்திய அணி ஸ்பெயினுடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் ஆண்களுக்கான இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் விளையாடி வருகின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது