ஹாக்கி

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்தியா-போலந்து அணிகள் இன்று மோதல்

ஜூனியர் உலக கோப்பை ஆக்கிப் போட்டியில் இன்று இந்தியா போலந்து அணிகள் மோத இருக்கின்றன.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

12-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் இன்று நடைபெறும் பி பிரிவின் முக்கியமான கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, போலந்துடன் (இரவு 7.30 மணி) மோதுகிறது. இரு அணிகளும் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா 3 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தாலும், கோல் வித்தியாசத்தின் முன்னிலை அடிப்படையில் இந்திய அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி அல்லது டிரா கண்டால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். தோல்வி கண்டால் வெளியேற வேண்டியது தான்.

முன்னதாக நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்க அணி 5-1 என்ற கோல் கணக்கில் சிலியையும் (ஏ பிரிவு), தென்கொரியா 5-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும் (சி பிரிவு) பதம் பார்த்து முதல் வெற்றியை ருசித்தது. இதே போல் நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும் (சி பிரிவு), 6 முறை சாம்பியனான ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவையும் (டி பிரிவு) வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்