image courtesy; twitter/@TheHockeyIndia 
ஹாக்கி

ஆண்கள் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; காலிறுதியில் இந்திய அணி தோல்வி

இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின.

மஸ்கட்,

முதலாவது ஐவர் ஆண்கள் ஆக்கி உலகக்கோப்பை போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 நாடுகள் பங்கேற்றிருந்த நிலையில், அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்றன.

இதில் இந்தியா 'பி'பிரிவில் எகிப்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஜமைக்கா அணிகளுடன் இடம்பெற்றிருந்தது. இந்தியா லீக் சுற்றில் 2 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்தியா காலிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியுடன் இன்று மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா முடிந்த அளவு போராடியும் நெதர்லாந்தை வீழ்த்த முடியவில்லை. முடிவில் இந்திய அணி 4-7 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்த தொடரில் இந்தியாவின் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்