ஹாக்கி

தேசிய ஜூனியர் ஆக்கி: தமிழ்நாடு-இமாச்சலபிரதேசம் ஆட்டம் ‘டிரா’

தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில், தமிழ்நாடு-இமாச்சலபிரதேசம் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.

தினத்தந்தி

அவுரங்கபாத்,

ஆண்களுக்கான 9-வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி (ஏ டிவிசன்) மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, நேற்று நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் இமாச்சலபிரதேசத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தமிழக அணியில் கார்த்தி 44-வது நிமிடத்திலும், மாரீஸ்வரன் 48-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இமாச்சலபிரதேச அணி தரப்பில் சரன்ஜீத் சிங் 57-வது நிமிடத்திலும், அமித் 59-வது நிமிடத்திலும் கோல் திருப்பினார்கள். மற்றொரு லீக் ஆட்டத்தில் அரியானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜார்கண்டை சாய்த்தது. இன்னொரு ஆட்டத்தில் மணிப்பூர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்