image courtesy;ANI  
ஹாக்கி

தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப்;5-வது நாள் லீக் ஆட்டங்கள் மராட்டியம் புதுச்சேரி அணிகள் வெற்றி....!!

தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடரின் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தினத்தந்தி

ஒடிசா,

13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஆக்கி அரங்கில் நடைபெற்று வருகிறது.இந்த தொடருக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதில் நடந்த 5-வது நாள் ஆட்டங்களில் மராட்டியம் மற்றும் புதுச்சேரி அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

5-வது நாள் நடந்த முதல் போட்டியில் மராட்டியம் மற்றும் கேரள அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 8-1 என்ற கோல் கணக்கில் மராட்டியம் அணி வெற்றி பெற்றது.மராட்டியம் அணி தரப்பில் அந்த அணி வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.கேரள அணியில் கேப்டன் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

இரண்டாவது ஆட்டத்தில் புதுச்சேரி மற்றும் ஜம்மு&காஷ்மீர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய புதுச்சேரி அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஜம்மு&காஷ்மீர் அணியை விழ்த்தி வெற்றி பெற்றது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு