ஹாக்கி

பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி தொடர் - சவிதா விலகல்…சலிமா தலைமையில் களமிறங்கும் இந்தியா

பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி வரும் ஆகஸ்ட் மாதத்தில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறுகிறது.

ஐதராபாத்,

பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டி ஐதராபாத்தில் வருகிற 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தகுதி சுற்றில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவு:

இங்கிலாந்து, தென்கொரியா, இத்தாலி, ஆஸ்திரியா

‘பி’ பிரிவு:

இந்தியா, ஸ்காட்லாந்து, உருகுவே,வேல்ஸ்

இந்த தகுதி சுற்றில் இருந்து டாப்-3 இடங்களைப் பெறும் அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் போட்டியில் 8-ந்தேதி உருகுவே அணியை சந்திக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய பெண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் கேப்டனும், கோல் கீப்பருமான சவிதா குடும்ப காரணங்களால் இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். எனவே அணித் தேர்வில் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இந்திய அணி சலிமா டேடே தலைமையில் களம் காண உள்ளது.

பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி வரும் ஆகஸ்ட் மாதத்தில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறுகிறது.