ஹாக்கி

நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி தோல்வியடைந்தது.

ஆக்லாந்து,

இந்திய பெண்கள் ஆக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணியில் மேகன் ஹல் 3-வது நிமிடத்திலும், கடைசி கட்டத்திலும் கோல் அடித்து அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். இந்திய அணியில் சலீமா 15-வது நிமிடத்தில் ஒரு கோல் திருப்பினார்.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மேம்பாட்டு அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஆட்டம் நாளை நடக்கிறது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்