புவனேஸ்வர்,
டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய ஆக்கி வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் வழங்கி பாராட்டிய ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், ஆக்கி இந்தியாவுடன் எங்களது பார்ட்னர்ஷிப் தொடரும். இந்திய ஆக்கி அணிகளுக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒடிசா அரசு ஆதரவு (ஸ்பான்சர்ஷிப்) அளிக்கும் என்றார்.