Image Courtesy : Hockey India  
ஹாக்கி

பெல்ஜியம் அணிக்கு எதிராக எங்களின் போராட்ட குணம் சிறப்பம்சமாக இருந்தது - லலித் உபாத்யாய்

பெல்ஜியம் அணிக்கு எதிராக விளையாடியது குறித்து இந்திய அணியின் லலித் உபாத்யாய் பேசியுள்ளார்.

ஆன்ட்வெர்ப்,

9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியன் பெல்ஜியத்துடன் மீண்டும் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. பெல்ஜியம் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் வென்று இருந்த நிலையில் 2-வது போட்டியில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இந்த போட்டியில் விளையாடியது குறித்து இந்திய அணியின் முன்னணி வீரர் லலித் உபாத்யாய் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது :

பெல்ஜியத்துக்கு எதிராக எங்களின் போராட்ட குணம் ஆட்டத்தின் பெரிய சிறப்பம்சமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இறுதிவரை போராடும் அணியாக நாம் உள்ளோம். நாம் உருவாக்கும் வாய்ப்புகளில் இருந்து பீல்டு கோல்களை அடிக்க முடியவில்லை என்றால், பெனால்டி கார்னர்களை உருவாக்க வேண்டும்.

பெனால்டி ஷூட் அவுட்களில் கூட, நாங்கள் ஐந்து கோல்களையும் அடித்தோம், இது அணியின் கூட்டு குழு முயற்சி. முன்கள வீரர்களிடையே நல்ல புரிதல் உள்ளது. அடுத்து நெதர்லாந்திற்கு எதிராக அவர்களின் சொந்த மைதானத்தில் விளையாடுவதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்த தொடரை சிறப்பான முறையில் முடிக்க விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரும் 18 ஆம் தேதி இந்திய அணி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...