image courtesy; twitter/ @TheHockeyIndia  
ஹாக்கி

புரோ ஆக்கி லீக்: இந்திய அணி 2-வது வெற்றி

இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடரின் 2-வது கட்ட போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.

இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. ஷூட்-அவுட்டில் இந்தியா முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. அதே சமயம் நெதர்லாந்தின் 4 வாய்ப்புகளில் 2 ஷாட்டை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்தி ஹீரோவாக ஜொலித்தார். முடிவில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை சுவைத்தது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் வருகிற 15-ந் தேதி மோதுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து