ஹாக்கி

மாநில ஆக்கி: ஐ.சி.எப். அணி அரைஇறுதிக்கு தகுதி

மாநில ஆக்கி போட்டியில் ஐ.சி.எப். அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

இந்தியன் வங்கி சார்பில் 3-வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஐ.சி.எப். அணி 5-2 என்ற கோல் கணக்கில் வருமான வரி அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. ஐ.சி.எப். அணியில் பிருத்வி, தனுஷ் அஸ்வின் குஜார், ஷியாம் குமார், தீபக் தலா ஒரு கோல் அடித்தனர். வருமான வரி அணி தரப்பில் சிங்கப்பா, ரஞ்சித் தலா ஒரு கோல் திருப்பினார்கள். மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் சாய் அணியை சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. ஐ.ஓ.பி. அணியில் பித்தப்பா 2 கோல்கள் அடித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் ஐ.சி.எப்.-ஐ.ஓ.பி. (பிற்பகல் 2.30 மணி), தெற்கு ரெயில்வே-இந்தியன் வங்கி (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்